‘’ஜாதிப் போஸ்டர்களை அரசு தடை செய்ய வேண்டும்’’ இயக்குனர் சீனு ராமசாமி

சென்ற வாரம் சென்னையில் நடந்த நீட் தேர்வுப் பிரச்சினைக்கு எதிரான ஒரு விழாவில் இயக்குனர் அமீரும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் மேடையிலேயே காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ரஞ்சித் மிகவும் ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் ஜாதி நம் நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்று அடித்துப் பேசினார். ரஞ்சித்தின் பேச்சுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் மாறி மாறி வரும் வேளையில் இயக்குனர் சீனு ராமசாமி தன் கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘’அது யாராக இருந்தாலும் தன் ஜாதியை விட்டு தானே வெளியேறணும் மக்களே. சுயஜாதிப் பெருமை பகையை வளர்க்கும். இதற்கிடையில் சிலர் லாப நண்டு பிடிப்பர். எப்படி தெரு,ஊர் பெயர்களுக்கு பின்னாலிருந்த ஜாதி நீக்கப்பட்டதோ அது போல ஜாதிப்பெயரில் போஸ்டர்கள், சுவரெழுத்துக்களுக்கு அரசு தடை செய்யணும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like More from author