‘’துப்பாக்கியில் ஆசைப்பட்டு ஸ்பைடரில் இணைந்தோம்’’ மகேஷ்பாபு பற்றி ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் 12௦ கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மகேஷ்பாபு முதல் முறையாக தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம் ‘ஸ்பைடர்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மகேஷ்பாபுவின் தமிழ் சினிமாவின் வருகைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது,

‘’10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் ஒக்கடுபடத்தைப் பார்த்தேன். அப்படம் வெளியாகி 3 வாரம் ஆன படத்தை கூட ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் போக்கிரிபடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் துப்பாக்கிபடத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் ‘ஸ்பைடர்’ மூலம் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்’’ என்றார்.

You might also like More from author

%d bloggers like this: