தெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடிவந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் உதவி இயக்குனராக சேர்ந்து, இயக்குனராகி வெற்றி பெற்று, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பிறகு ஹீரோவானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ என்ற ஹிட் படங்களுக்குப் பிறகு இவர் நடித்த படங்கள் தோல்வியை அடையவே சினிமாவிற்கு இடைவெளி விட்டார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டு வந்து ‘இசை’, ‘இறைவி’ என தன் நடிப்புப் பரிமாணத்தை வெளிப்படுத்தி செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ஏ.ஆர்.முருகதாசின் ‘ஸ்பைடர்’, விஜய்யின் ‘மெர்சல்’, ‘மாயா’ இயக்குனரின் ‘இறவாக்காலம்’ என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதால் செம உற்சாகத்தில் உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ‘ஜெயம்’ ரவி, அரவிந்த சாமி நடித்த ‘போகன்’ தெலுங்கு ரீமேக்கில் அர்விந்த் சாமி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

You might also like More from author

%d bloggers like this: