மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஜோதிகா

‘காற்று வெளியிடை’ என்ற மரண ப்ளாப் படத்தைக் கொடுத்த மணிரத்னம் தனது அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கினார். ஒருவழியாக ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் தனது புதிய படத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நானி, ஃபகத் ஃபாசில் போன்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அது கெஸ்ட் ரோல்தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ஹீரோவாக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே படத்தின் ஹீரோயினாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே ‘மன்மதன்’, ‘சரவணா’ படங்களில் சிம்பு, ஜோதிகா ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: