இயக்குனர் சுசீந்திரனின் காதல் காவியம் ‘ஏஞ்சலினா’

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போன மாதம் ‘அறம் செய்து பழகு’ என்ற அந்தப் படத்தின் தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றிய சுசீந்திரன் அப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படவேளைகளின் இடைவெளியில் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு இளமையான காதல் படத்தை இயக்கி வந்தார். தற்போது அப்படத்திற்கு ‘ஏஞ்சலினா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இளைஞர்களை கவரும் விதத்தில் இந்த தலைப்பும், படத்தின் போஸ்டர் டிசைனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

You might also like More from author

%d bloggers like this: