‘’ஒரு ஆணிடமிருந்து இப்படியொரு கதையா…?’’ – நெகிழும் ஜோதிகா

சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு ‘36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ படங்களில் நடித்துள்ளார். ‘மகளிர் மட்டும்’ படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மாவும் ‘நாச்சியார்’ படத்தை பாலாவும் இயக்கியுள்ளார்கள். ‘மகளிர் மட்டும்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா கூறும்போது,

‘’ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரடு இணைந்து நடிக்கும் போது, சிறிது பயமாக இருந்தது. எங்களுடைய முதல் நாள் படப்பிடிப்பு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது சரியாக வசனத்தைப் பேசி நடிக்க முடியவில்லை. அவர்கள் மூவருமே என்னை சகஜ நிலைக்கு திருப்பினார்கள். ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்

சாலை பயணத்தின் போது மருமகள் ஒருவர் தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது தான் கதை. இக்கதை எப்படியொரு ஆணிடமிருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

You might also like More from author

%d bloggers like this: