‘’இது என் இந்தியா அல்ல’’ – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

சில நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி கடுமையான கருத்துக்களை பதிவு செய்துவந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சில மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மும்பையில் தனது ஒன் ஹார்ட் படத்தின் திரையிடலில் கலந்துகொள்ள வந்த ஏ.ஆர்.ரஹ்மான் பத்திரிக்கையாளர்களிடம் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.  ”கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

You might also like More from author

%d bloggers like this: