அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.

இந்தப் படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இத்தலைப்பின் மூலம் இது ‘முதல்வன்’ இரண்டாம் பாகமோ என்று கேள்வி எழுந்துள்ளது. காரணம் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூன் கேரக்டரின் பெயர் புகழேந்தி. இதில் முதல்வராகப் பதிவியேற்கும் அர்ஜூன் ‘புகழேந்தி எனும் நான்’ என்று ஆணை எடுப்பார். இதனையே தலைப்பாக வைத்திருப்பதால் பெரும் கவனம் இப்படத்தின் மீது குவிந்துள்ளது.

You might also like More from author