உடல்நிலை பற்றிய வதந்தி வருத்தப்பட்ட எஸ்.பி.பி

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தனது இனிய குரலால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என எந்த பாரபட்சமே இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியவர், மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இப்படிப்பட்ட ‘லிவிங் லெஜன்டை வருத்தப்படப் படவைக்கும் அளவிற்கு தொடர்ந்து சில நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று வதந்தி பரப்பப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்போது அறிக்கை ஒன்றின் மூலம் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

‘’எனக்கு உடல்நிலை சரியில்லையா எனக் கேட்டு உலகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் உடல்நிலை சரியில்லை என்று வதந்திகள் பரவி வருவதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது.

நான் நலமுடன் இருக்கிறேன். சளி, இருமல் என மருத்துவமனைக்கு செல்வதை யாராவது பார்த்தாலும் தீவிர பாதிப்பு என்றும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிடுகிறார் என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

நிஜத்தில் சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி இறந்துவிட்டார். ஆகையால், என்னால் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக மட்டுமே நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: