கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘வேலைக்காரன்’

‘தனி ஒருவன்’ பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கி, சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடித்திருக்கும் படமான ‘வேலைக்காரன்’ படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக பட பூஜை அன்றே தெரிவித்தார்கள். பிறகு செப்டம்பர் 29-ஆம் தேதியான ஆயுத பூஜை அன்று ரிலீஸ் அறிவித்தனர். ஆனால் முருகதாஸின் ‘ஸ்பைடர்’ வெளியாவதால் அந்த தேதியிலிருந்தும் பின்வாங்கினார்கள். தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் என்பதால் வேறு வழியே இல்லாமல் டிசம்பருக்கு ஜம்ப் அடித்துவிட்டது ‘வேலைக்காரன்’.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை இருந்தாலும் மூன்று நாட்களுக்கு முன்பே டிசம்பர் 22 ஆம் தேதி ‘வேலைக்காரன்’ படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இந்த தேதியாவது உறுதியான இறுதியான ரிலீஸ் தேதியாக இருக்குமா என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

You might also like More from author