காப்பி சரித்திரத்தை கைவிடாத அட்லீ – நெட்டிசன்கள் கிண்டல்

அட்லீ என்றாலே ‘காப்பி’ என்று அர்த்தம் ஆகிவிட்டது தமிழ் சினிமாவில். மணிரத்னத்தின் ‘மௌனராகம்’ படத்தை ‘ராஜா ராணி’யாகவும், சத்ரியனை ‘தெறி’யாகவும் எடுத்தவர். ராஜாராணி என்ற தலைப்பும் பழைய தமிழ்ப் படத்தினுடையது. ‘தெறி’, ‘மெர்சல்’ தலைப்புக்கள் கூட வேறொரு உதவி, குறும்பட இயக்குனர்களிடமிருந்து திருடியதுதான் என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் உண்டு.

இந்நிலையில் மெர்சல் படத்தின் பாடல் காட்சிகளின் போஸ்டர் வெளியானதை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அந்தப் போஸ்டரே ஒரு ஹாலிவுட் படத்தினுடைய போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று அந்த ஹாலிவுட் போஸ்டரையும் ஷேர் செய்துள்ளனர். மேலும் எப்படியும் மெர்சலும் ஒரு பழைய தமிழ் படத்தின் காப்பியாகத்தான் இருக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

You might also like More from author