‘’தமிழ் சினிமாவில் சுதந்திரம் இல்லை’’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி, வரும் ஆயுத பூஜைக்கு வெளியாகவிருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. மகேஷ்பாபு ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லன்களாகவும் நடித்துள்ளனர். ஹீரோயினாக ராகுல் பரீத் சிங் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கும் முருகதாஸ் தமிழ் சினிமாவின் அவலநிலையை வெளுத்து வாங்கியுள்ளார்.

‘’தமிழ் திரையுலகில் எந்தவொரு விஷயத்தையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எந்த விவகாரத்தை கையில் எடுத்தாலும் பிரச்சினை செய்கிறார்கள். அரசியல் தலையீடு இருக்கிறது. அதிகாரிகள் தலையீடு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிப் படம் வந்தால் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி என்று ஏகப்பட்டது இருக்கிறது. சினிமாத் துறையை எந்தவொரு தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக விடும்போது, இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும். சமூகத்தையே திருப்பிப் போடுகிற படங்கள், நமது நாட்டின் பிரச்சினைகளை சொல்கிற படங்கள், மக்களின் மனநிலைகளை சொல்கிற படங்கள் என நிறைய வரும்’’ என்று வேதனையோடும், கோபத்தோடும் சொன்னார்.

You might also like More from author