விரைவில் இயக்குனராகும் விக்ரம் பிரபு

‘கும்கி’ படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்தப் படங்களிலும் வெற்றிக்கனியை சுவைக்கவில்லை. நாளை ரிலீசாகும் ‘நெருப்புடா’ படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய இயக்குனர் ஆசையையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு.

‘’இயக்குநர் ஆக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளேன். நடிகராகிவிட்டேன். இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறேன். நல்ல கதை அமைந்தால் மற்ற நாயகர்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. அடுத்ததாக பக்காஉட்பட 2 படங்களில் நடித்து வருகிறேன். கும்கி 2’ பற்றி தெரியவில்லை. நல்ல கதை அமைந்தால் அப்பாவுடன் நடிக்க ஆசை. வரும் காலத்தில் கண்டிப்பாக படம் இயக்குவேன்’’ என்று உறுதியாகக் கூறியுள்ளார் விக்ரம் பிரபு.

You might also like More from author