வில்லன் வேடங்களாவது கை கொடுக்குமா பாபி சிம்மாவிற்கு…?!

கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாபி சிம்மாவிற்கு ‘ஜிகர்தண்டா’ படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்காக தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் சினிமா ஜால்ராக்கள் அவர்தான் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்று ஊளையிட, கர்வம் தலைக்கேறிய பாபி சேட்டைகளை ஆரம்பித்தார். மனோபாலா உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் நொந்து நூலானார்கள்.

ஆனால் ஹீரோவாக இவர் நடித்த அரை டஜன் படங்கள் வந்ததும் போனதும் தெரியாத நிலைக்கு ஆளாகின. இதனால் மீண்டும் வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, விக்ரமின் ‘சாமி 2’, சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே 2’ படங்களில் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் வேடங்களிலாவது தொடர்ந்து நீடிக்க இந்தப் படங்களின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் பாபி சிம்மா.

You might also like More from author

%d bloggers like this: