‘காளி’, ‘அண்ணாதுரை’ – இறங்கி அடிக்கும் விஜய் ஆண்டனி

வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி ஹீரோ அவதாரம் எடுத்த ‘நான்’ மிகப் பெரும் வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த ‘சலீம்’ அவரை ஆக்ஷன் ஹீரோவாக்கியது. சசி இயக்கத்தில் நடித்த ‘பிச்சைக்காரன்’ மாபெரும் வெற்றிப் பெற்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் விஜய் ஆண்டனிக்கு பெற்றுக் கொடுத்தது. இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கே பெரும் வசூலைக் குவித்து விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் மார்க்கெட் உருவானது.

ஆனால் அடுத்து அவர் நடித்த ‘சைத்தான்’, ‘எமன்’ போதிய வெற்றி பெறவில்லை. இதனால் அப்செட்டான விஜய் ஆண்டனி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வந்தார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’, அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ என இரண்டு ஆக்ஷன் படங்களை ஒரே மூச்சில் முடித்துவிட்டார். இந்தப் படங்களின் மூலம் இடையில் ஏற்பட்ட சிறிய சரிவை சமப்படுத்தப் போகிறாராம். ‘அண்ணாதுரை’யில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: