‘பாகுபலி’ ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டார் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் பலர் அழைத்தும் நடிக்காமல் வளர்ந்து வரும் இயக்குனர் சுஜித்தின் ‘சாஹோ’ படித்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு பிரபாஸ் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

‘ஸ்பைடர்’ படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு காத்திற்கும் முருகதாஸ் அடுத்து விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அடுத்த வரும் 2௦18 தீபாவளிக்கு ரிலீசாகிறது இப்படம். இந்தப் படத்திற்குப் பிறகுதான் பிரபாஸ் படத்தை முருகதாஸ் இயக்குகிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: