‘’அஜித்திடமிருந்து எஸ்கேப் ஆகுங்கள்’’ – சிவாவிற்கு இயக்குனர்கள் அறிவுரை

யாருமே எதிர்பார்க்காத வகையில் அஜித்தின் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றிருந்தார் சிவா. இதனால் சிவா மீது ஏகப்பட்ட கடுப்பில் இருந்தனர் சில இயக்குனர்கள். ‘வீரம்’, ‘வேதாளம்’ அளவிற்கு ‘விவேகம்’ ஹிட்டாகததால் இவர்களுக்குக் கொண்டாட்டம் ஆனது.

இந்நிலையில் அஜித் சிவாவை அழைத்து ‘’மீண்டும் படம் பண்ணலாம்’’ என்று உறுதி கூற, சந்தோஷமானார் சிவா. ஆனால் சிவாவிற்கு போன் செய்த சில பிரபல இயக்குனர்கள் ‘’தொடர்ந்து ஒரே ஹீரோவை இயக்கினால் நல்ல படம் கொடுத்தால் கூட ரசிகர்களுக்கே சலிப்புதான் ஏற்படும். எனவே முதலில் அஜித்திடமிருந்து எஸ்கேப் ஆகுங்கள்’’ என்று அட்வைஸ் செய்கிறார்களாம்.

ஆனால் சிவா ‘’அஜித் படத்தைத் தான் இயக்குவேன்’’ என்று உறுதியாக இருக்கிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: