விரைவில் ஸ்ரேயா திருமணம் ரசிகர்கள் சோகம்

‘எனக்கு 2௦ உனக்கு 18’ என்ற படத்தில் த்ரிஷா மெயின் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்தான் நடித்து அறிமுகம் ஆகியிருந்தார் இடையழகி ஸ்ரேயா. ஆனாலும் அப்படத்தில் தனது ‘சிக்’கென்ற உடம்பால் ‘பக்’கென ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ‘சிவாஜி’யில் நடித்து கெத்து காட்டினார். விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். வடிவேலுவுடன் டூயட் பாடியதால் ஓரங்கட்டப்பட்டு, இப்போது நம்ம சிம்புவின் AAA படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருக்கிறார் ஸ்ரேயா.  

‘’சினிமாவில் அறிமுகமான புதிதில் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் என்னை சுற்றி இருந்த நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் உதவி செய்ததால் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

என்னை சந்திக்கிற பலரும் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையில் திருமணமும் குழந்தையும் முக்கியமானது. என் வாழ்க்கையிலும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். எனக்கு பிடித்தவரை சந்தித்து விரைவில் திருமணம் செய்து கொள்வேன்’’ என்றார்.

ஸ்ரேயாவின் திருமண செய்தியால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மிதக்கிறார்கள்.

You might also like More from author

%d bloggers like this: