கைவிட்ட சிம்பு கைவிடாத நயன்தாரா

லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்தில் ஆர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தவர் சிம்பு. ஆனால் சிம்பு செய்த சேட்டையால் படத்திலிருந்து விலக்கினார் லிங்கு. கொதித்தெழுந்த சிம்பு ‘வேட்டை’க்குப் போட்டியாக ‘வேட்டை மன்னன்’ என்று பெயர் வைத்து நெல்சன் என்பவரின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். வழக்கம்போல் சிம்புவின் சோம்பேறித்தனத்தால் படமே ட்ராப்பானது. இதெல்லாம் நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில்தான் நெல்சனுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அவர் சொல்லிய கதை பிடித்துப்போனதால் உடனே ஒப்புக் கொண்டார். இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நயனுடன் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: