அறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

தனது குருநாதரான ஷங்கரின் S PICTURES தயாரிப்பில் ‘ஈரம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அறிவழகன். ஹாரர் த்ரில்லர் படமான ‘ஈரம்’ அறிவழகனின் விறுவிறுப்பான திரைக்கதையாலும், மேக்கிங்காலும் நல்ல ஹிட் படமானது. ஆனால் அடுத்தடுத்து அறிவழகன் இயக்கிய ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால் ‘குற்றம் 23’ படத்தின் மூலம் வெற்றி பெற்றார் அறிவழகன்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த அறிவழகன் இந்தக் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

You might also like More from author

%d bloggers like this: