ஷட் டவுன் ஆன ‘சங்கமித்ரா’ கலகலப்பில் சுந்தர்.சி

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சங்கமித்ரா’ எனும் பிரம்மாண்ட சரித்திரப் படம் உருவாவதாக இருந்தது. இந்தப் படத்தின் தொடக்க விழாவை கேன்ஸ் திரைப்பட விழாவில் நடத்தினார்கள். ஆனால் திடீரென்று ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகினார். ‘’இதுவரைக்கும் முழுக்கதையே உருவாகவில்லை’’ என்று பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். சுந்தர்.சியும், தயாரிப்பு நிறுவனமும் அதனை மறுத்தார்கள்.

ஆனால் படத்தின் ஹீரோயினாக யாரை நடிக்க வைப்பது என்று தீவிர விவாதங்களில் இருந்தார் சுந்தர்.சி. இன்றுவரை அதற்கு விடை கிடைக்காத நிலையில் ‘சங்கமித்ரா’ படத்தையே இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கப்போகிறாராம் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்தவர்களே இப்படத்திலும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

You might also like More from author