விஜய் விக்ராந்த் மோதல் – சுசீந்திரன் விளக்கம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி அன்று ரிலீசாவது தெரிந்த விஷயம்தான். பெரிய ப்ராஜெக்ட் என்பதால் மெர்சலுக்குப் போட்டி இருக்காது என்று நினைத்தால் போட்டிப் போட்டுக்கொண்டு தீபாவளி அன்று தங்கள் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் சில இயக்குனர்கள். ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் தம்பி விக்ராந்த் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். மேலும் ‘மெர்சல்’ படத்துக்குப் போட்டியாக வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி சுசீந்திரன் டிவிட்டரில்

‘’எங்களுடைய இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை. மெர்சல்உடன் வருகிறோம். 2013-ம் ஆண்டு பாண்டியநாடுதிரைப்படத்தை அஜித் சார் படமான ஆரம்பம்படத்தோடு வெளியிட்டோம். ஆரம்பம்படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது’’ என்று கூறியுள்ளார்.

You might also like More from author