தீவிரவாத தாக்குதலை தழுவி உருவாகும் படத்தில் த்ரிஷா

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

மும்பையின் தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்தே இப்படம் உருவாக உள்ளது, ஹோட்டல் வரவேற்பாளர் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவே கூறப்படுகிறது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தீவிரவாதிகளின் பிடியில் பொதுமக்கள் சிக்கி இருக்கும் சம்பவங்களை இப்படம் காட்சிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

த்ரிஷாவுடன், தெலுங்கு நடிகர்கள் பிரம்மானந்தம் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் இணைந்து இப்ப்டத்தில் நடிக்க உள்ளனர். இந்தபடம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக உள்ளது.

You might also like More from author