‘’அட்டகாசம்…!’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன்

‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ என செல்வராகவன் படங்களின் அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனும், யுவனும் நண்பர்கள் என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட் என்பதையும் தாண்டி ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தன. ஆனால் செல்வராகவனுக்கும், யுவனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

காலப்போக்கில் மனஸ்தாபம் மறைந்து மீண்டும் இவர்கள் இணைந்த படமான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. படம் எப்போது ரிலீஸ் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்டபடி இருக்க, அதற்கு செல்வராகவன் பதிலளித்துள்ளார். அப்போது யுவனின் இசையை புகழ்ந்தார்.

‘’நெஞ்சம் மறப்பதில்லை வெளியீடு குறித்து நீங்கள் விசாரிப்பது என் மனதைத் தொட்டது. விரைவில் வரும். ஆனால் வெளியீட்டு தேதி இயக்குநர் கையில் இல்லை. தயாரிப்பாளர் மதனுக்குதான் அது தெரியும்.

உங்கள் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா செய்துள்ள பின்னணி இசை பற்றி எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், அட்டகாசம்…!’’ என்று புகழ்ந்திருக்கிறார். இதனால் யுவன் ரசிகர்கள் பூரிப்பில் உள்ளனர்.

 

You might also like More from author

%d bloggers like this: