‘’நெஞ்சில் துணிவிருந்தால் வசூலைக் குவிக்கும்’’ – சுசீந்திரன் உறுதி

சுசீந்திரனின் தனது சினிமா வாழ்வில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற நான்கு ஹிட் படங்களையும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என்ற இரண்டு சுமார் ஹிட் படங்களையும், ‘ராஜபாட்டை’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ என மூன்று தோல்விப் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் ‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரின், சூரி, அப்புக்குட்டி, சாதிகா, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘அறம் செய்து பழகு’ என்று தலைப்பு வைத்திருந்த சுசீந்திரன் இன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றினார். இந்தப் புதிய தலைப்பை சுசீந்திரனின் தந்தை நல்லு சாமி வெளியிட்டார். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன்,

‘’நெஞ்சில் துணிவிருந்தால் எனக்கு பத்தாவது படம். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ வரிசையில் நிச்சயம் வசூலைக் குவிக்கும் படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுவேன்’’ என்று கூறினார்.

You might also like More from author

%d bloggers like this: