சமூக வலைத்தளத்தில் தீய எண்ணங்கள் சிம்பு அதிரடி முடிவு

எந்த நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே குடி இருக்காவிட்டாலும் கூட அவ்வப்போது தன்னுடைய படங்களைப் பற்றிய செய்திகளை ரசிகர்களுக்கு டிவிட்டர், ஃபேஸ்புக் இவற்றில் தெரிவித்துக் கருத்துக் கேட்பார் சிம்பு. ஆனால் சமீப காலமாக சிம்பு பெயரில் போலி அக்கவுண்டில் தவறான பதிவுகளை போட்டதால் மிகவும் அப்செட்டிலிருந்தார் சிம்பு.

இந்நிலையில் திடீரென அனைத்து சமூக வலைத்தளங்களிளிருந்தும் வெளியேறினார் சிம்பு. அதற்கான காரணத்தையும் சொல்லிவிட்டே விலகியிருக்கிறார்.

‘’எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.

ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்

சுதந்திர தின வாழ்த்துகள்’’

என்று அறிவித்துவிட்டு முழுமையாக வெளியேறினார் சிம்பு.

 

You might also like More from author

%d bloggers like this: