‘ஸ்கெட்ச்’ ஷூட்டிங் நிறைவு விரைவில் விக்ரமின் ‘சாமி 2’

‘தில்’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’ போல இன்றைய டிரெண்டிற்குத் தகுந்தாற்போல ஒரு பக்காவான மாஸ் மசாலா கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த விக்ரமிற்கு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் அப்படி ஒரு கதை சொல்ல, உடனே கால்ஷீட் கொடுத்தார் விக்ரம். பரபரவென ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் விஜய் சந்தர். அண்மையில் இறுதி பாடல் காட்சிக்காக பாங்காங் சென்ற ‘ஸ்கெட்ச்’ குழுவினர் ஷூட்டிங்கை மொத்தமாக முடித்துவிட்டுத் திரும்பியுள்ளனர்.

ஒருவழியாக ஸ்கெட்சை முடித்த விக்ரம் உடனடியாக கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் விரைவில் முடிக்கத் திட்டமிட்டு முழுக்கவனத்துடன் நடித்து வருகிறார். விக்ரம் இப்படி ஓடி ஓடி படங்களை நடித்து முடிக்கக் காரணம் ‘சாமி 2’ தான். இயக்குனர் ஹரி அதற்கான வேலைகளை படுவேகமாக செய்து வருகிறார். செப்டம்பரில் ஷூட்டிங்கை ஆரம்பித்து கோடை விடுமுறையும், ‘சாமி’ முதல் பாகம் ரிலீசான அதே மே 1 ஆம் தேதி ‘சாமி 2’ வை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஹரி.

You might also like More from author