காதலில் விழுந்த மடோனா செபாஸ்டின்

‘ப்ரேமம்’ படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் மடோனா செபாஸ்டின். தன் இளமையாலும், அழகாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த மடோனா செபாஸ்டின் தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப.பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களின் ப்ரோமோஷன்களில் இவர் ஓவர் பந்தா செய்ததாக செய்திகள் வந்தன. மேலும் ‘ப.பாண்டி’ ப்ரோமோஷன்களில் கலந்துக்காமல் டிமிக்கிக் கொடுத்துவிட்டார் என தனுஷ்கூட கவலை தெரிவித்தார்.

ஏற்கனவே இவர் இப்படி இருக்கும் நிலையில் காதலில் வேறு விழுந்திருக்கிறார். காதலனும் சினிமாவைச் சேர்ந்தவர்தான். இவர்தான் தற்போது மடோனாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். அவர் சொல்படிதான் மடோனாவும் செயல்படுகிறாராம். இதனால் மடோனா நடிக்கும் படங்களுக்குப் பிரச்சினை வந்தால் மடோனாவின் பெயர் மேலும் ரிப்பேராகும் என்பது மட்டும் உறுதி.

You might also like More from author

%d bloggers like this: