‘’அடுத்த பட இயக்குனர் யார்…?’’ – குழப்பத்தில் சிவகார்த்திகேயன்

மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விரைவில் முடியவிருக்கும் இப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

காரணம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சிவகார்த்திகேயன், இப்படத்தைத் தயாரிப்பது 24 AM STUDIOS நிறுவனம். ஆனால் அதே சமயம் முன்பொரு காலத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு படம் பண்ண அட்வான்ஸ் வாங்கியிருந்த சிவகார்த்திகேயனுக்கு அவர் தரப்பிலிருந்து படம் ஆரம்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதலில் நடிப்பார் சிவகார்த்திகேயன் என்ற குழப்பம் நீடிக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: