கௌதம் மேனனுடன் கை கோர்க்கும் ஆக்ஷன் ஹீரோ

தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கும் நிலையில் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன். இந்த வருட இறுதிக்குள் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதே சமயத்தில் ‘துருவங்கள் பதினாறு’ இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசுரன்’, ‘பெண் ஒன்று கண்டேன்’ போன்ற படங்களை தயாரிக்கவும் உள்ளார்.

இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ முடித்தபின்பு புதிய ஆக்ஷன் படத்தை ஒரே மூச்சில் இயக்க முடிவு செய்துள்ளார் கௌதம். இந்தப் படத்திற்கு ஹீரோவாக ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷனை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இவர் ‘மாநகரம், ‘மாயவன்’ என்று தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author