அஞ்சலி துணையோடு சூப்பர் ஸ்டாரோடு மோதும் ஜெய் அதிரும் திரையுலகம்

கடைசியாக நடித்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில் ஜெய் தற்போது நம்பியிருக்கும் ‘பலூன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக அவரது ‘உண்மைக் காதலி’ என்று கிசுகிசுக்கப்படும் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தை auraa cinemas விலைக்கு வாங்கியுள்ளது. மேலும் பலூன் படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் என்றும் அறிவித்து விட்டது அந்நிறுவனம். காரணம் அன்று ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் வசூலை அள்ளிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் இது ஒரு பெரிய ரிஸ்க் இருப்பதை auraa cinemas நிறுவனம் உணரவில்லையா என்று தெரியவில்லை. அன்றுதான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஆந்திரா சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ரிலீஸாகிறது. மேலும் ‘தனி ஒருவன்’ வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா சிவகார்த்திகேயனை இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ படமும் ரிலீஸாகிறது.

படத்தின் நல்ல கதையே ‘பலூன்’ ‘’யானை காதில் புகுந்த எறும்பா அல்லது அதே யானை காலில் மிதிபடும் லட்டா’’ என்பதைத் தீர்மானிக்கும்.  

You might also like More from author

%d bloggers like this: