விஜய் சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன் விரைவில் ஷூட்டிங்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்த படம்தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, த்ரிஷா என்ற இரண்டு ஹீரோயின்கள் கமிட் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஷூட்டிங் நடந்தபின் என்ன நடந்ததோ அப்படம் கைவிடப்பட்டது. விக்னேஷ் சிவனும் சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு சன் டிவியின் சாட்டிலைட் ரைட்ஸ் விஷயத்தில் வெளிவந்துவிட்டது. விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தைத்தான் சிவகார்த்திகேயனுக்கு தகுந்தாற்போல கதையில் பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கியுள்ளார் விக்னேஷ் சிவன் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. பொன்ராம் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

You might also like More from author

%d bloggers like this: