இங்கிலீஷில் எடுக்கப்படும் சிம்புவின் தமிழ் படம்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு சிம்புவின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சிம்பு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. செப்டம்பர் 2017 வெளியீடு” என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் சிம்பு.

அடுத்ததாக இப்படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்டு பிறகுதான் ஷூட்டிங் என்ற புதுமையான தகவலையும் தெரிவித்தார்.

இந்நிலையில் மேலும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் சிம்பு.

இரண்டு பதிப்புகளாக படம் உருவாக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. ஒரே பதிப்பு அது ஆங்கிலத்தில் மட்டுமே. அதன் வசனத்தில் உதவி செய்த இயக்குநர் கவுதம் மேனனுக்கு நன்றி. அப்படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

You might also like More from author