கமல், விஷால் மீது ஆறாத வருத்தத்தில் சரத்குமார்

சென்ற வருடம் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்புக்கும், சரத்குமார் தரப்புக்கும் போட்டி நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் சரத்குமார் அணியினர் விஷால் அணியை சரமாரி தாக்கினார்கள். விஷால் அணியோ சரத்குமார், ராதாரவி மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. தேர்தல் முடிவில் விஷால் அணி வாகை சூடியது. சில நாட்களில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரத்குமார் கதறி அழுதார். அதேபோல் விஷால் அணிக்கு பீஷ்மராக இருந்து வெற்றி பெறவைத்த கமல்ஹாசன் மீதும் கோபத்தில் இருந்தார் சரத்குமார்.

இந்நிலையில் ஓராண்டுக்கும் மேலாகியும் விஷால் மீதும், கமல் மீதும் அவருக்கு இருந்த வருத்தம் இன்னும் போகவில்லை எனபதை அவரது பேச்சில் உணரமுடிந்தது. முதல்வரை சந்தித்து வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது,

‘’முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. வேறு எந்த காரணமும் இல்லை. அதிமுக.,வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பார்க்காமல் அனைத்து மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

கமல் பற்றி எந்த கருத்தும் கூற விரும்வில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அனைவரும் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் கூறுவேன். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற விஜயின் கருத்தை நான் வரவேற்கிறேன். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 27 ம் தேதிக்கு பிறகு அது பற்றி பேச முடியும்’’ என்றார்.

 

You might also like More from author

%d bloggers like this: