பணவெறி பிடித்த பொதுமக்களின் கொடூர குணத்தை தோலுரிக்கும் ‘துப்பறிவாளன்’

‘பிசாசு’ என்ற பேய் படத்தை ஹிட்டடித்த மிஷ்கின் விஷாலை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இதில் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற ஒரு துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார் விஷால். மிஷ்கின் ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’ பாணியில் உருவாகி வரும் இப்படம் செப்டம்பர் 14-ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ‘’படத்தின் கதை எதைப்பற்றியதாக இருக்கும்…?’’ என்று நாம் துப்பறிந்து கொண்டிருந்த நேரத்தில் மிஷ்கினே ‘துப்பறிவாளன்’ படத்தின் கதையை ஓபனாக சொல்லியிருக்கிறார்.

‘’இந்தப் படத்தில் பணத்துக்காக மக்கள் என்ன கொடூரமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். வெறும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிற படமாக மட்டும் இருக்காது. இதில் சண்டைக்காட்சிகள், எமோஷன் காட்சிகள், மனிதநேயக் காட்சிகள் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தான் இப்படம் இருக்கும்’’ என்றார்.

You might also like More from author