அத்துமீறிய ரசிகர்கள் அதட்டிய விஜய்

தன்யா ராஜேந்திரன் என்ற பெண் பத்திரிக்கையாளர் ‘சுறா’ படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். இது நடந்தது ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று. ஆனால் அப்போது தன்யா ராஜேந்திரனை டிவிட்டரில் கடுமையாக திட்டி வந்த விஜய் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்யா ராஜேந்திரனை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த தன்யா ராஜேந்திரன் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் புகார் ஒன்றை கொடுக்க, விஷயம் சூடு பிடித்தது. மேலும் நடிகர் விஜய் இதற்கு எந்தப் பதிலையும் அளிக்காமல் இருப்பது குறித்தும் தன்யா ராஜேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்

கத்தி தலைக்கு வருவதை உணர்ந்த விஜய் தனது அறிக்கை மூலம் தன்யா ராஜேந்திரனுக்கு ஆதராவாகவும், ரசிகர்களுக்கு அதட்டல் கலந்த வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார்.

இதோ விஜய்யின் அறிக்கை :

‘’சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.

அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்’’.

You might also like More from author

%d bloggers like this: