‘’நவீன யுவதிகளால் அவதிப்படும் ஆண்களின் கதையே தரமணி’’ – ராம்

இயக்குனர் ராம் இயக்கி, வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாவுள்ள படம்தான் ‘தரமணி’. இப்படத்தின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இயக்குனர் ராம் ‘தரமணி’ குறித்து கூறும்போது,

‘’அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களில் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் ‘தரமணி’.

உலகமயமாக்கலால் தமிழ்ப் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்க்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ படத்தில் பேசியுள்ளேன்.

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. ‘தரமணி’ பல கலாச்சாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படமாக ‘தரமணி’ இருக்கும்’’ என்றார்.

 

You might also like More from author