‘‘வேலாயுதமா… தனி ஒருவனா…?’’ – ‘வேலைக்காரன்’ சீக்ரெட்

‘தனி ஒருவன்’ என்ற பிரம்மாண்டமான வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவாகர்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேஹா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் மோகன் ராஜா கடைசியாக இயக்கிய ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ இரண்டுமே சமூகப் பிரச்சினைகளை அலசும் படமாகத்தான் அமைந்தன.

ஆனால் ‘வேலாயுதம்’ முதல் பாதி கலகல காமெடியாகவும் பின்பாதி சீரியசாகவும் செல்லும். ‘தனி ஒருவன்’ அபப்டியில்லாமல் படத்தின் முதல் ஃபிரேமிலேயே கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார் மோகன் ராஜா. இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில் இருவரும் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி, அர்விந்த் சாமி போல சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில் இருவரின் கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டது போலவே தெரிகிறது. எனவே ‘வேலைக்காரன்’ அனேகமாக தனி ஒருவனாகத்தான் இருப்பான் என்பதில் சந்தேகமேயில்லை.

 

You might also like More from author

%d bloggers like this: