கார்த்திக் ஹீரோ சூர்யா வில்லன் – ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரகசியம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப் படம் ஹிட்டானால்தான் பழைய கெத்து நீடிக்கும். இல்லாவிடில் நிலைமை ரொம்பவும் மோசமாகிவிடும். ‘நானும் ரௌடிதான்’ ஹிட் இயக்குனர் என்பதாலும், அனிருத் இசையமைப்பாளர் என்பதாலும் போதாதற்கு கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, கோவை சரளா, சத்யன், ஆனந்த ராஜ் என நட்சத்திர பட்டாளமே இருப்பதாலும் கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கிறார் சூர்யா.

படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் இணைந்துள்ளார் அல்லவா. அவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்று கூறப்பட்டது. ஆனால் கொஞ்சம் விசாரித்தால் படத்தின் உண்மையான வில்லன் சூர்யாதான் என்றும், கார்த்திக்தான் ஹீரோ என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவிற்கு ‘மங்காத்தா’ அஜித் போல ஒரு வில்லன் ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் உணமையாகத்தான் இருக்கும்போல.

 

You might also like More from author

%d bloggers like this: