மனக்கசப்புதான்… ஆனாலும் மீண்டும் அஜித்துடன்

அஜித்தின் கால்ஷீட்டிற்காக எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவம் இருந்தாலும் அஜித் மனம் வைப்பவர்தான் தயாரிப்பாளர். கடந்த ஐந்து வருடங்களில் அஜித் இதுவரை ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ என தொடர்ந்து மூன்று படங்களையும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்குத் தான் தன் படங்களை தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார். தற்போது ‘விவேகம்’ படத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.

ஆனால் ‘விவேகம்’ படம் ஆரம்பித்ததிலிருந்து சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக செலவாகிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை சத்யஜோதிக்கு இருந்ததாகவும் ஆனால் அதனைப் பற்றி அஜித்தும், இயக்குனர் சிவாவும், எதையும் கண்டுகொள்ளவில்லை என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தன. எனவே அஜித்தின் அடுத்த படமும் ஏ.எம்.ரத்னம்தான் தயாரிப்பாளர் என்று பேசப்பட்டது.

ஆனால் ஆச்சரியம். அஜித்தின் அடுத்த படமும் சத்யஜோதி பிலிம்ஸ்தானாம். சிவாவே இயக்குனர் என்பதும் உறுதியாகிவிட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

You might also like More from author