சினிமாவில் ஓவர் கிளாமரால் ரெஜினாவிற்கு நேர்ந்த கதி

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கில் கொடி கட்டிப் பறந்து வருபவர்தான் ரெஜினா காசன்டிரா. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்துவிட்டு படம் ஹிட்டடித்தும் தனக்கு பெரிய வரவேற்பு எதுவும் இல்லாததால் தெலுங்கில் சென்று நம்பர் 1 ஹீரோயினானதற்கு அவரின் கிளாமர்தான் காரணம்.

ஆனால் அந்த கிளாமரே அவருக்கு பேக்ஃபயர் ஆகிவிட்டதுதான் சோகம். போட்டி அதிகமாகிவிட்டதால் தற்போது காட்டுவதைவிட இன்னும் அதிக கிளாமர் காட்ட வேண்டும் என்று நினைத்த ரெஜினா சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்த ‘நஷத்திரம்’ படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார். சென்ற வாரம் ரிலீசான இப்படம் அட்டர் ப்ளாப்பாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் ரெஜினாவின் ஓவர் கிளாமர் முகம் சுளிக்க வைக்கிறது என்று ரசிகர்களே கூறியிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார் ரெஜினா.

 

You might also like More from author