ஆகஸ்ட் 18 முதல் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷின் சினிமா வாழ்வில் மிகப் பெரிய மாஸ் ஹிட்டடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கஜோல், அமலா பால், சமுத்திரகனி, விவேக் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழில் ரிலீசாகிறது.

அதே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் ஒரு வாரம் தள்ளி, அதாவது 18 ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author