‘கவண்’ ஹிட்டுக்குப் பிறகு விக்ரமை இயக்கும் கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’ என்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கிய ‘மாற்றான்’, ‘அனேகன்’ இரண்டு படங்களும் மண்ணைக் கவ்வின. இதனால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் நிராகரிப்புகள் அவருக்கு நிகழ்ந்தன. எப்படியாவது ஒரு வெற்றிப் படம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ‘கவண்’ படத்தை வெற்றிப் படமாக்கினார்.

வெற்றிப் படம் கொடுத்ததும் சொல்லி வைத்தாற்போல முன்னணி ஹீரோக்களிடமிருந்து அழைப்பு. இந்த முறை வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டி, கடுமையாக ஸ்கிரிப்ட் வொர்க் செய்திருக்கிறாராம். அதிரி புதிரி ஆக்ஷன் கதையான இந்தப் படத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு இப்போதே எகிறுகிறது.

You might also like More from author

%d bloggers like this: