தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் குஷ்பூ சுந்தர் – விஷால் அறிவிப்பு

0

கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான குழு தயாரிப்பாளர் சங்கம் கடந்த 2015 ஆம் பதவி ஏற்றது. இதில் அம்மா கிரியேஷன் T.சிவா , பைவ் ஸ்டார் கதிரேசன் ,P.L.. தேனப்பன் ராதா கிருஷ்ணன் , ஆகியோர் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருந்து வந்தனர். பழைய நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைந்து தற்போது வருகிற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் பலர் தனி தனி குழுக்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள். சமீபத்தில் விஷால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இதன் முதல் முயற்சியாக விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு திருமதி. குஷ்பூ சுந்தர் அவர்கள் போட்டியிடவுள்ளார் என்றும் மற்ற நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார் விஷால்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.