உடைந்த பிரபு சாலமன் இமான் கூட்டணி பலவீனமான ‘கும்கி 2’

கமலஹாசன் – இளையராஜா, ஷங்கர் – ரஹ்மான், கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ், செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா என்ற வரிசையில் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்த கூட்டணி இயக்குனர் பிரபு சாலமன் இசையமைப்பாளர் இமான் கூட்டணி. ‘லீ’ படத்தில் ஆரம்பித்த இந்த கூட்டணி ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ என தொடர்ந்து தரமான இசையாலும், யுகபாரதியின் பாடல்வரிகளாலும் ரசிகர்களை உற்சாகபப்டுத்தியது. ‘கயல்’, ‘தொடரி’ படங்கள் படு தோல்வியடைந்த போதிலும் இமானின் இசையால் பாடல்கள் ஹிட்டாகின.

ஆனால் திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை. பிரபு சாலமன் தனது ‘கும்கி 2’ படத்திற்கு இமானுடன் இணையவில்லை. இமானுக்குப் பதில் ‘தெகிடி’, ‘சேதுபதி’ படங்களின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். உண்மையில் ரொம்ப சுமாரான ‘கும்கி’ படம் பெரிய ஹிட்டானதே இமானால்தான். ஆனால் ‘கும்கி 2’வில் அவர் இல்லாதது படத்திற்குத்தான் பலவீனம் என்பதே உண்மை.

You might also like More from author

%d bloggers like this: