முருகதாஸ் விஜய் இணையும் ‘ரமணா’ ஸ்டைல் அரசியல் த்ரில்லர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முதலாக விஜய் நடித்த படம் ‘துப்பாக்கி’. மெகா ஹிட்டான இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் ஸ்டைலில் உருவானது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இணைந்த இரண்டாவது ப்ளாக் பஸ்டரான ‘கத்தி’ விவசாயிகளின் கண்ணீர் பிரச்சினையைப் பற்றி உரக்கப் பேசிய சமூகப் படமாக அமைந்தது.

இந்த நிலையில் முருகதாசுடன் மூன்றாவதாக விஜய் இணையவுள்ள படம் ‘துப்பாக்கி’ ஸ்டைல் படமா, இல்லை ‘கத்தி’ ஸ்டைல் படமா என்ற விவாதம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ போன்று இல்லாமல் ‘ரமணா’ ஸ்டைலில் ஒரு பெரிய சமூகப் பிரச்சினையை அலசும் அரசியல் படமாக இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன. எந்த ஸ்டைல் படமாக இருந்தாலும் மெகா ஹிட்டாவது மட்டும் உறுதி என்று அடித்துச் சொல்லலாம்.

You might also like More from author

%d bloggers like this: