நல்லாவே ஒத்துழைத்த ராகுல் ப்ரீத் சிங் விஜய் படத்தில் ஹீரோயின்

தமிழில் தடையற தாக்க‘, ‘புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் ஓடாத காரணத்தால் ஆந்திராவில் அடைக்கலமானார் அம்மணி ராகுல் ப்ரீத் சிங். அங்கே படம் ஓடுகிறதோ இல்லையோ படு கவர்ச்சியாக நடித்து முன்னனி ஹீரோயினாக வேண்டும் என்று சபதம் பூண்டிருந்தார். ஆனால் அவர் நடித்த படங்களும் ஹிட்டானது. அவரின் கவர்ச்சியும் எடுபட்டதால் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாகிவிட்டார்.

தற்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக ஸ்பைடர், வினோத் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்து வருகிறார். ராகுலின் பந்தா, பில்டப் இல்லாத ஒத்துழைப்பை படக்குழு அனைவரிடமும் பாராட்டி வருகிறார்கள். இதன் விளைவாக ஸ்பைடர் படத்தை அடுத்து விஜய் படத்திலும் ராகுல் ப்ரீத் சிங்கையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

You might also like More from author

%d bloggers like this: