‘’தனுஷிடமிருந்து விலகியது நல்லதுதான்’’ – மௌனம் கலைத்த அனிருத்

தான் கடைசியாக நடித்த ‘கொடி’, ‘பவர் பாண்டி’ படங்களுக்கு தனது வெற்றிக் கூட்டணியான அனிருத்தை இசையமைக்க அழைக்கவில்லை. அதேபோல் தனுஷிற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அனிருத் இசையமைக்கவில்லை. மேலும் ‘’இந்தப் படத்தில் ஷான் ரோல்டனின் இசையும் முதல் பாகத்தைப் போல இல்லை’’ என்பது போன்ற கருத்துக்கள் ரசிகர்களிடையே நிலவுகிறது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அனிருத். ‘’இதுவும் வேலையில் ஒரு பகுதிதான். வழக்கமான இணையிலிருந்து விலகுவது கூட நல்லதுதான். அப்போதுதான் மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும். எனக்கும் நேரமில்லை. ஒருவேளை நானே இதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்திருந்தால் முதல் பாகத்தைப் போல இல்லாமல் கூட போயிருக்கும். ஷான் ரோல்டனின் இரண்டாம் பாக இசையை முதல் பாகமான என் இசையுடன் ஒப்பிடுவதில் நியாயமே இல்லை. ஷான் ரோல்டன் என்னைவிட மூத்தவர். எனது சூப்பர் சீனியர். மிக அமைதியானவர். இந்த ஒப்பீடுகள் எங்களுக்குள் தேவையில்லாத இறுக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று பக்குவமாகப் பதிலளித்துள்ளார்.

You might also like More from author