படப்பிடிப்பில் விக்ரம் செய்த காரியம் அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நான்கு வருடங்களுக்கு முன்பே தனது இயக்கத்தில் நடிக்கவிருந்த சூர்யா கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டதால் தற்போது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் விக்ரமுடன் ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், டிடி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 3௦ நாட்கள் படப்பிடிப்பை நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘’ஷூட்டிங் முதல் நாளே எனக்கு மிகக் கஷ்டமான சீனைக் கொடுத்துவிட்டார் கௌதம். எப்படியோ நானும் சரியாக நடித்துவிட்டேன். நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்ரம் ‘சூப்பர்’ என்று வெகுவாகப் புகழ்ந்தார். தேசிய விருது வாங்கிய பெரிய நடிகர் எந்தவ்த பந்தாவுமே இல்லாமல் என்னைப் பாராட்டியதில் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அவர் பாராட்டு என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று புளங்காகிதம் அடைகிறார்.

You might also like More from author