நிவின் பாலி படத்தில் பி.சி.ஸ்ரீராம்

கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவன்களின் படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான ‘ரெமோ’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார். இதனை திரையுலகில் பலர் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

தற்போது ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த அதே 24 AM STUDIOS நிறுவனம் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதையை ஆர்.டி.ராஜா எழுத, திரைக்கதை அமைத்து, இயக்கவிருப்பவர் பிரபு ராதாகிருஷ்ணன். இந்தப் படத்திற்கும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author